அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட் தொற்று காலத்தில், கங்கை நீரில் கன உலோக மாசு குறைவு: ஆய்வில் தகவல்

Posted On: 08 FEB 2021 10:04AM by PIB Chennai

கொவிட் தொற்று காலத்தில், கங்கை நீரில், கன உலோக மாசு அளவு, குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கொவிட் தொற்று காலத்தில் கங்கை நதி நீரில் மாசு அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதில் கன உலோக மாசு அளவு குறைந்தது கண்டறியப்பட்டது. தொழிற்சாலை கழிவு நீர் கங்கை நீரில் நேரடியாக கலப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கன உலோக மாசு அளவு குறைந்தது ஆய்வில் தெரியவந்தது.

கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர், கொரோனா தொற்று காலத்தில் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் தினந்தோறும் கங்கை நீரின் புவி வேதியியல் அளவீடுகளை ஆய்வு செய்தனர். 51 நாட்கள் முடக்கத்தில், தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பு குறைந்ததால், கங்கை நீரின் கலந்துள்ள கன உலோக அடர்வும் 50 சதவீதம் குறைந்திருந்தது தெரியவந்தது. ஆனால், வேளாண் செயல்பாடுகள் மற்றும் வீட்டு கழிவு நீர் கலப்பால், கங்கை நீரில் உள்ள நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் அளவு ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய அளவிலான முடக்கம், வீட்டு உபயோக கழிவு நீர் கலப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696072

******

 



(Release ID: 1696217) Visitor Counter : 153