சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
லக்னோவில் நடைப்பெற்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சியை, 29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர் : முக்தார் அப்பாஸ் நக்வி தகவல்
Posted On:
07 FEB 2021 1:14PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அவாத் ஷில்ப் கிராமத்தில் ‘ஹூனார் ஹாத்’ என்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை நடைப்பெற்றது.
இந்த கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
இந்த கண்காட்சியில், நாட்டின் அனைத்து மாநில கைவினைப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தது. இங்கு வந்த பார்வையாளர்கள், நாட்டின் பல வகை பாரம்பரிய உணவுகளையும் ருசித்தனர். 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500 கலைஞர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.
உள்நாட்டு தயாரிப்பு கைவினைப் பொருட்கள் அனைத்தும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. ஆன்லைன் மூலமாகவும், இந்த கண்காட்சியில் இடம் பெற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை மக்கள் வெகுவாக பாராட்டினர்.
பொருட்களையும் வாங்கினர்.
தற்போது இந்த கைவினைப் பொருட்கள் அரசின் மின்னணு இணையதளத்திலும் கிடைக்கின்றன.
இந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி மூலம், கடந்த 6 ஆண்டுகளில், சுமார் 5 லட்சம் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
நாட்டின் பிரபல கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.
25வது ‘ஹூனார் ஹாத்’ நிகழ்ச்சி மைசூரில் பிப்ரவரி 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
தில்லியில் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் மார்ச் ஒன்றாம் தேதி வரை நடத்தப்படுகிறது.
கோட்டா, ஜெய்ப்பூர், சண்டிகர், இந்தூர், மும்பை, ஐதராபாத், ராஞ்சி, சூரத் , அகமதாபாத், கொச்சி, புதுச்சேரி மற்றும் இதர இடங்களிலும் இந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695924
(Release ID: 1695950)
Visitor Counter : 227