ஆயுஷ்

ஆயுஷ் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, இத்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்: நிபுணர்கள் கருத்து

Posted On: 07 FEB 2021 9:49AM by PIB Chennai

மத்திய நிதி நிலை அறிக்கையில் ஆயுஷ் துறைக்கு ரூ.2,970.30  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இத்துறையை  வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதி நிலை அறிக்கையில், ஆயுஷ் துறைக்கு அடுத்த நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகை, நடப்பு நிதியாண்டின் மாற்றியமைக்கப்பட்ட ஒதுக்கீட்டு தொகையை விட 28 சதவீதம் அதிகம்.  இதன் தாக்கம் எப்படியிருக்கும் என ஆயுஷ் அமைச்சகம், இத்துறை நிபுணர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது.

ஆயுஷ் தொழில்துறையின் பிரதிநிதியும், தூதப்பபேஷ்வர் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ரஞ்சித் புராநிக் கூறுகையில், ‘‘ ஆயுஷ் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது, ஆயுஷ் துறை ஆய்வுப் படிப்புகள் அதிகரிக்க உதவும், இது ஆயுஷ் மருத்துவத்துக்கு ஊக்கமளிக்கும் என தெரிவித்தார்.

தேசிய மூலிகை வாரியத்துக்கு சமீபத்தில் ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஆயுஷ் துறைக்கு ஊக்குவிப்பாக இருக்கும்’’ என்றார் அவர்.

ஆயுர்வைத் மருத்துவமனைகளின் தலைவர் திரு ராஜீவ் வாசுதேவன் கூறுகையில், ‘‘ நிதி நிலை அறிக்கையில் ஆயுஷ் துறைக்கான நிதி அதிகரிப்பு வரவேற்கத்தக்கது. சுகாதாரத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு சுமார் 7 சதவீதம் அதிகரிக்கும். ஆனால் ஆயுஷ் துறைக்கு இந்தாண்டு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது, இது இத்துறை முன்னேற்றத்துக்கு உதவும் என்று அவர் கூறினார்.

 தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ஆயுஷ் துறையை ஊக்கத்துடன் செயல்பட வைக்கும்’’ என்றார் அவர்.

ஆயுர்வேத நிபுணர் டாக்டர் கீதா கிருஷ்ணன் கூறுகையில், ‘‘ஆயுஷ் துறை தொடர்ந்து வளர்ச்சியடையும் என்பதை இந்த பட்ஜெட் ஒதுக்கீடு குறிக்கிறது’’ என்றார்.

தேசிய யோகாசன கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு உதித் சேத் கூறுகையில், ‘‘யோகாசனத்தை உலகளவில் கொண்டு செல்வதற்கு தேவையான ஆதரவு, இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளது.  வாய்ப்புகளை  பயன்படுத்தி, இந்திய பாரம்பரிய  மருத்துவமுறையை உலகளவில் கொண்டு செல்வதற்கான நேரம் இது’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695897

 

------



(Release ID: 1695944) Visitor Counter : 203