பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான நடவடிக்கைகள்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2021 4:26PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக  பதிலளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திரு ஸ்மிரிதி ஜுபின் இரானி, கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகளை தடுத்து, பாதுகாப்பான பணி சூழ்நிலையை அவர்களுக்கு வழங்குவதற்காக பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013- இந்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

இச்சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், கையேடு மற்றும் பயிற்சி திட்டம் ஒன்றை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியது. மேலும்பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்காக 1023 விரைவு நீதிமன்றங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் இன்னல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு வகையான சேவைகளை (காவல், மருத்துவம், சட்டம் மற்றும் உளவியல் உதவி மற்றும் தற்காலிக தங்குமிடம்) ஆகியவற்றை ஒரே இடத்தில் பெறும் வகையில், 700 மையங்கள், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 39 மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 32 மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

மகளிர் தொழில்முனைவோருக்கான ஆன்லைன் சந்தைப்படுத்துதல் தளமாகமகிளா -ஹாட்செயல்பட்டுவருகிறது. நாடு முழுவதிலும் இருந்து 321 மகளிர் தொழில்முனைவோர் இதில் இணைந்துள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து எட்டு பேர் இணைந்துள்ளனர்.

திருமணமாகும் வயது மற்றும் தாய்மையடைதலோடு சுகாதாரம், குழந்தை இறப்பு விகிதம், தாய்மார்கள் இறப்பு விகிதம், கருத்தரித்தல் விகிதம், பாலின விகிதம் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்காக பணிக்குழு ஒன்றையும் அரசு அமைத்துள்ளது.

குழந்தைகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006-ன் படி தரமான ஊட்டச்சத்து, குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் பணியும் நடைப்பெற்று வருகிறது.

கொவிட்-19-ன் போது, குழந்தைகள், பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்ற பயனாளிகளின் இல்லங்களுக்கே அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நேரில் சென்று உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்கள்.

2014-ஆம் ஆண்டு 104508817 பேர் பயனாளிகளாக இருந்த நிலையில், 2020-இல் இந்த எண்ணிக்கை 85505148 ஆக குறைந்துள்ளது.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1695662) வருகையாளர் எண்ணிக்கை : 366
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Manipuri