உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உடான் 4.0-வின் முதல் கட்டம்: அசாமில் 24 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன

Posted On: 04 FEB 2021 5:57PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் பூரி, உடான் திட்டத்தின் விரிவான முக்கிய அம்சங்களை பட்டியலிட்டார்:

1.    தேவைகளை பூர்த்தி செய்தல்

2.    குறைந்த செலவில் விமானப் பயணம்

3.    தேர்வு செய்யப்பட்ட விமான நிறுவனங்களுக்கு நிதி உதவி

4.    தேர்வு செய்யப்பட்ட விமான நிறுவனங்களின் குறைந்த அளவிலான செயல் திறன்

5.    உடான் வழித்தடங்களில் பிரத்தியேக சேவைகள்

6.    வடகிழக்கு பகுதிகள், மலைப்பிரதேசங்கள், தீவுகள் போன்ற பகுதிகளுக்கு முன்னுரிமை

அசாமில் தேர்வு செய்யப்பட்ட விமான நிறுவனங்களின் சேவைகளை வழங்குவதற்காக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இதுவரை ரூ. 79,60,680 வழங்கியுள்ளது. உடான் 4.0-வின் முதல் கட்டமாக அசாமில் இந்த திட்டத்தை செயல்படுத்த 24 வழித்தடங்களை அந்த ஆணையம் கண்டறிந்துள்ளது.

விமானங்களின் இருக்கைகளின் அளவை அடிப்படையாகக் கொண்டு கடல் விமானங்கள் உள்ளிட்ட வெவ்வேறு கனரக விமானங்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

பிரிவு 1ஏ - < 9 பயணிகள்

பிரிவு 1 – 9-20 பயணிகள்

பிரிவு 2 – 21-80 பயணிகள்

பிரிவு 3 - > 80 பயணிகள்

 

(Release ID  1695187)

 



(Release ID: 1695308) Visitor Counter : 96


Read this release in: English , Urdu , Bengali , Manipuri