தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக எல்&டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு எஸ் என் சுப்பிரமணியன் நியமனம்

प्रविष्टि तिथि: 04 FEB 2021 4:00PM by PIB Chennai

எல் & டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் திரு எஸ் என் சுப்பிரமணியனை தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நியமித்துள்ளது. இப்பதவியை அவர் மூன்று வருடங்களுக்கு வகிப்பார்.

தலைசிறந்த பொறியாளரான திரு சுப்பிரமணியன் எல்&டி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வர்த்தகத்திற்கு பல்லாண்டு காலம் தலைமை வகித்து, அதை நாட்டின் மிகப்பெரிய மற்றும் உலகின் 14-வது பெரிய கட்டுமான நிறுவனமாக வளர்த்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் எல்&டி, கனரக பொறியியல், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகிய துறைகளிலும் இயங்கி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695135

***


(रिलीज़ आईडी: 1695217) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri