எஃகுத்துறை அமைச்சகம்

இரும்புத்தாது மற்றும் எஃகு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 03 FEB 2021 3:26PM by PIB Chennai

மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

தேவை அதிகம் காரணமாக எஃகு விலை அதிகரித்துள்ளதால், இரும்புத் தாது, மற்றும் எஃகு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒழுங்குமுறையற்ற வெளிச்சந்தையில், தேவை மற்றும் விநியோகத்துக்கு ஏற்ப எஃகு விலை நிர்ணயிக்கப்படுகிறது.  சர்வதேச சந்தையிலும் இரும்புத்தாது விலை அதிகமாக உள்ளது. இந்த நிதியாண்டில் கடந்த நவம்பர் மாதம் 112 மெட்ரிக் டன் இரும்புத்தாது மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 152 மெட்ரிக் டன் இரும்புத்தாது உற்பத்தி செய்யப்பட்டது. ஒடிசாவில் உள்ள 13 இரும்புத்தாது சுரங்கங்கள், ஏலத்துக்குப்பின் சரியாக செயல்படாததால், உற்பத்தி குறைந்தது. இவற்றை அதிகரிப்பதற்கான சுரங்கம் மற்றும் கனிம கொள்கை சீர்திருத்தம் செய்வது உட்பட பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

* பொது ஊரடங்கு காலத்தின் போது, எஃகு உற்பத்தியை மீண்டும் தொடங்க,  தொழிற் சங்கங்கள் , உள்நாட்டு எஃகு தொழில் துறை தலைவர்கள் உட்பட பல தரப்பினருடன் பல கட்ட ஆலோசனைகள் மற்றும் இணைய கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதற்கு ஏற்ற வகையில் உள்துறை அமைச்சகமும் அவ்வப்போது வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

* நாட்டில் தற்போது 914 எஃகு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. பொதுத் துறையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள என்எம்டிசி எஃகு ஆலையில் தற்போது பணிகள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன.  கொவிட்-19 காரணமாக நடப்பு நிதியாண்டை தவிர கடந்த 3 ஆண்டுகளில் உள்நாட்டு எஃகு உற்பத்தி அதிகரித்ததால், எஃகு இறக்குமதி குறைந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்படாத, அல்லது குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படும் சில ரக எஃகு,  உற்பத்தி துறைக்காக தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 3.21 மெட்ரிக் டன் எஃகு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694742

                                                                                             -----



(Release ID: 1694923) Visitor Counter : 155


Read this release in: English , Urdu , Manipuri , Punjabi