விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய பட்ஜெட் 2021-22: வேளாண்மை உள்கட்டமைப்பு நிதிக்கான பயன்களை வேளாண் பொருட்கள் சந்தைபடுத்துதல் குழுக்கள் பெற உள்ளன

Posted On: 03 FEB 2021 5:10PM by PIB Chennai

மண்டிகள் என்றழைக்கப்படும் ஒழுங்குமுறை படுத்தப்பட்ட சந்தைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் கோடி நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி வசதியை பயன்படுத்திக் கொள்வதற்கான தகுதியுடைய பயனாளிகளாக வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தல் குழுக்கள் இருக்கும் என்று 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதன் மூலம், செயல்திறன்மிக்க மதிப்பு சங்கிலியால் விவசாயிகளின் வருவாய் உயரும். சேமிப்பு கிடங்குகள் வசதி கிடைப்பதன் மூலம் தங்களது விளைபொருட்களை விவசாயிகள் சேமித்து வைத்து நல்ல விலைக்கு விற்க முடியும். பழங்கள், பூக்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அழுகக் கூடிய பொருட்களை பாதுகாக்க குறைந்த அளவிலான தட்பவெட்ப நிலை தேவைப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், வருடத்திற்கு 3 சதவீத வட்டிக் கழிவுடனும், ரூபாய் 2 கோடி வரையிலான கடன்களுக்கு உத்தரவாதத்துடனும், ரூபாய் ஒரு லட்சம் கோடி வரை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் கடன் உதவி வழங்கப்படும்.

**

(Release ID: 1694801)



(Release ID: 1694867) Visitor Counter : 126