தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இது ஒரு முற்போக்கான நிதிநிலை அறிக்கை: திரு பிரகாஷ் ஜவடேகர்
प्रविष्टि तिथि:
01 FEB 2021 6:22PM by PIB Chennai
இது ஒரு முற்போக்கான நிதிநிலை அறிக்கை என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் 2021-22 மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உலகம் முழுவதும் கொவிட்-19 தொற்று, பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது என்றார். ஆனால் இந்தியா கொவிட்-19 தொற்றுக்கு எதிராக வெற்றி பெற்றதுடன், வறுமைக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்து முன்னேற்றத்தை நோக்கி நடை போட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மூலதனச் செலவில் பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், உள்கட்டமைப்பில் ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஒரு பெரும் முன்முயற்சி என்று கூறினார். இது வேலைவாய்ப்பில் பெரும் ஊக்குவிப்பாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
(रिलीज़ आईडी: 1694161)
आगंतुक पटल : 178