எரிசக்தி அமைச்சகம்
நேபாளத்தில் 678 மெகாவாட் நீர்மின் உற்பத்தி திட்டத்தை எஸ் வி ஜெ என் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது
Posted On:
30 JAN 2021 7:09PM by PIB Chennai
இந்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எஸ் வி ஜெ என் லிமிடெட், நேபாளத்தில் 678 லோயர் அருண் மெகவாட் நீர்மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. போட்டி ஏலத்தின் மூலம் எஸ் வி ஜே என்னுக்கு இப்பணியை நேபாள அரசு வழங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு நந்த் லால் சர்மா கூறியுள்ளார்.
நேபாள பிரதமர் திரு கே பி சர்மா ஒலி தலைமையில் 2021 ஜனவரி 29 அன்று நடைபெற்ற நேபாள முதலீட்டு வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
நேபாள பிரதமர் திரு கே பி சர்மா ஒலியை எஸ் வி ஜே என் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு நந்த் லால் சர்மா காட்மாண்டுவில் சந்தித்து பேசினார்.
இந்த திட்டத்திற்கான ஏலத்தில் சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின், நிறுவனங்களுடன் போட்டியிட்டு இந்த திட்டத்தை எஸ் வி ஜே என் நிறுவனம் வென்றதாக அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 3561 மில்லியன் அலகுகள் மின்சாரம் கிடைக்கும். இதன் மூலம் நேபாளம் வளர்ச்சியடைவதோடு, இந்திய-நேபாள பரஸ்பர பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்றும் திரு சர்மா கூறினார்.
********
(Release ID: 1693625)
Visitor Counter : 240