பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

“ஆதி மகோத்சவ்” என்னும் தேசிய பழங்குடியினர் திருவிழாவை 2021 பிப்ரவரி 1 அன்று குடியரசு துணைத் தலைவர் புதுதில்லியில் துவக்கி வைக்கிறார்

Posted On: 30 JAN 2021 6:52PM by PIB Chennai

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின், இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பு (டிரைஃபெட்) ஏற்பாடு செய்யும் ஆதி மகோத்சவ்என்னும் தேசிய பழங்குடியினர் திருவிழாவை 2021 பிப்ரவரி 1 அன்று மாலை 6.30 மணிக்கு புதுதில்லியில் உள்ள தில்லி ஹாட்டில் குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு துவக்கி வைக்கிறார்.

மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா தலைமையேற்கவுள்ள இந்த நிகழ்ச்சியில், மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர் திருமதி ரேணுகா சிங், இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பின் தலைவர் திரு ரமேஷ் சந்த் மீனா மற்றும் மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு ஆர் சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

2021 பிப்ரவரி 1 முதல் 15 வரை நடைபெறவுள்ள ஆதி மகோத்சவத்தில், பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினை பொருட்கள், உணவு மற்றும் வர்த்தகம் ஆகியவை கொண்டாடப்படும். 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இத்திருவிழாவின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் வளமிக்க, பலதரப்பட்ட கைவினைப்

பொருட்கள் மற்றும் கலாச்சாரத்தை ஒரே இடத்தில் கொண்டு வந்து, அவற்றை மக்களிடையே பிரபலப்படுத்துவதே ஆகும்.

கொவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட எதிர்பாராத சூழ்நிலையின் காரணமாக, 2020-ல் ஆதி மகோத்சவத்தை டிரைஃபெட் நடத்தவில்லை. தற்போது இந்த பாரம்பரியம் தொடர்கிறது.

 

******&***


(Release ID: 1693618) Visitor Counter : 258