சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

தேசிய கடல் ஆமை பாதுகாப்பு செயல்திட்டம் அறிமுகம்

Posted On: 28 JAN 2021 7:15PM by PIB Chennai

கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் ஆமைகளை பாதுகாப்பதற்கான அவசியத்தை கருத்தில் கொண்டு, இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய செயல்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் புது தில்லியில் இன்று வெளியிட்டது.

காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய சுற்றுச்சூழல்வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், கடல்சார் பல்லுயிர்தன்மை இந்தியாவுக்கு அழகு சேர்க்கிறது என்றும், செயல்திறன் மிக்க நடவடிக்கைகளின் மூலம் அதை பாதுகாப்பது அவசியம் என்றும் கூறினார்.

அரசு, மக்கள் உட்பட தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் இணைந்து செயல்பட்டு எவ்வாறு கடல்சார் உயிரினங்களை பாதுகாப்பது என்பது குறித்து இன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்திட்டம் விளக்குகின்றன.

 

-------

 

 

 


(Release ID: 1693057) Visitor Counter : 292