சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான இந்திய-பிரெஞ்சு கூட்டு ஒட்டுமொத்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக அமையும்: திரு பிரகாஷ் ஜவடேகர்
Posted On:
28 JAN 2021 6:43PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பிரான்சு நாட்டின் சூழலியல் மாற்றம் அமைச்சர் திருமிகு பார்பரா பொம்பிலி ஆகியோர் இணைந்து இந்திய-பிரெஞ்சு சுற்றுச்சூழல் வருடத்தை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தனர்.
நீடித்த வளர்ச்சியில் இந்திய-பிரெஞ்சு கூட்டை வலுப்படுத்துவதும், சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான திறன்மிகு செயல்களை அதிகப்படுத்துவதும் இதன் அடிப்படை நோக்கமாகும். இதன் மூலம் அவற்றுக்கு அதிக கவனம் கிடைக்கும்.
முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள திருமிகு பார்பரா பொம்பிலியை வரவேற்ற திரு பிரகாஷ் ஜவடேகர், பருவநிலை மாற்றத்தில் இந்திய-பிரான்ஸ் கூட்டுறவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
“பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட சர்வதேச சூரிய சக்தி கூட்டின் இரு முக்கிய தூண்கள் நாமாவோம். இந்த புரட்சிகரமான நடவடிக்கை ஒரு வெற்றிகரமான பரிசோதனையாக மாறியுள்ளது. உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான இந்திய-பிரெஞ்சு கூட்டு ஒட்டுமொத்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக அமையும்,” என்று அவர் கூறினார்.
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்தியா ஏற்கனவே எட்டியுள்ளதாகவும், மாசு உமிழ்வில் 26 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, சூழலியல் குறித்த இரு தரப்பு கூட்டம் ஒன்றும் நடைப்பெற்றது.
------
(Release ID: 1693042)
Visitor Counter : 255