சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

ஊட்டச்சத்து மற்றும் கொவிட் விழிப்புணர்வு முகாமில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உரை

Posted On: 28 JAN 2021 6:16PM by PIB Chennai

கொவிட் நெருக்கடி நிலையை, ஒரு வாய்ப்பாக மாற்ற, அரசு, மக்கள் மற்றும் இதர அமைப்புகள் இணைந்து செயல்பட்டன என்று மத்திய சிறுபான்மையினர் விவாகரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனம், பெண்கள் மற்றும் தேவைப்படும் பிரிவினருக்காக ஊட்டச்சத்து மற்றும் கொவிட் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இதில் மத்திய அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகள், கொவிட் தொற்று தொடங்கிய ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்டது, நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கு இது சான்றாக உள்ளது.

அரசின் தீவிர நடவடிக்கைகளால், அதிக மக்கள் தொகை இருந்தும், கொரோனா தொற்று வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தது

கொரோனா நெருக்கடி காலத்தில், சொந்த நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்தியதோடு மட்டும் அல்லாமல், மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.

கொரோனா ஆபத்து இந்தியர்களுக்கு கவனிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான காலமாக நிருபித்து விட்டது. இது உலக மனித குலத்துக்கே முன்மாதிரியாக உள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்

கொரோனா தொற்று சமயத்தில் மக்கள் நலனுக்காக உதவி செய்த சுய உதவிக்குழு பெண்கள் இந்நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்

-----



(Release ID: 1693039) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Hindi