விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்: திரு தோமர்

Posted On: 27 JAN 2021 8:18PM by PIB Chennai

விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும் என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு சங்கத்தின் 92-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர், வேளாண் ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை பாராட்டினார்.

வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு பலன் அளிப்பதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் பேசினார்.

மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

-----



(Release ID: 1692801) Visitor Counter : 140