பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
தூய்மையான எரிசக்தி தொடர்பான புதிய மாற்றத்திற்கு வழிகாட்டுமாறு தொழில்துறை தலைவர்களுக்கு பெட்ரோலிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அறைகூவல்
प्रविष्टि तिथि:
27 JAN 2021 8:05PM by PIB Chennai
உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதோடு நின்று விடாமல் சர்வதேச எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவு செய்து தற்சார்பு இந்தியா லட்சியத்தை எட்டுவதற்கு இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை முக்கிய பங்காற்றும் என்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று கூறினார்.
ஃபிபி விருதுகள் 2020 விழாவில் பேசிய அவர், நமது மக்களின் எரிசக்தி பாதுகாப்பை நாம் உறுதி செய்து, குறைந்த விலையில், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய, தூய்மையான, திறன்வாய்ந்த மற்றும் நீடித்த எரிசக்தியை வழங்க வேண்டும். தூய்மையான எரிசக்தி துறையாக பெட்ரோலிய துறை மாறுவதை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொவிட்-19-இன் போது, நாடு பெருந்தொற்றை சிறப்பாக எதிர்கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்கள் பெரிதும் உதவின. நாட்டின் எந்த பகுதியிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. உஜ்வாலா பயனாளிகளுக்கும் 14 கோடிக்கும் அதிகமான எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டதன் மூலம் ஏழைகளுக்கு மிகவும் தேவையான உதவிகள் கிடைத்தது.
“டிஜிட்டல் மயமாக்கல், எரிவாயு-சார்ந்த பொருளாதாரம், புதிய மற்றும் மாற்று எரிசக்தி போன்றவற்றில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். பிரதமரின் உஜ்வால் திட்டம், எரிவாயு-சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி முன்னேறுதல் மற்றும் பிஎஸ்-6-இன் அறிமுகம் ஆகியவை உலகெங்கிலும் இருந்து பாராட்டை பெற்றுத்தந்துள்ளன.”
எத்தனால் கலந்த பெட்ரோல் எட்டு சதவீதத்துக்கும் அதிகமான அளவை எட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். “2024-25-க்குள் 20 சதவீத எத்தனால் கலப்புக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன் மூலம், எத்தனால் கலப்பை அதிகளவில் செய்யும் நாடாக இந்தியா மாறும்,” என்றும் அவர் கூறினார்.
-----
(रिलीज़ आईडी: 1692799)
आगंतुक पटल : 216