இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பள்ளி வாழ்க்கையின் ஒருங்கிணைந்த அம்சமாக உடல் தகுதி மாறிவிட்டது: திரு கிரண் ரிஜிஜூ
இடுகை இடப்பட்ட நாள்:
27 JAN 2021 5:56PM by PIB Chennai
‘பிட் இந்தியா ஸ்கூல் வீக்’ இரண்டாவது கட்ட நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ இன்று பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் 2021 ஜனவரி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், கொச்சியில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளி மாணவர்களின் உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் மெய்நிகர் முறையில் நடைப்பெற்றது. சூரிய நமஸ்காரம், உடற்பயிற்சி, நடனம் போன்றவற்றை பள்ளி மாணவர்கள் செய்து காட்டினார்கள்.
மாணவர்களின் பயிற்சியை பாராட்டிய மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, ‘‘நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் உடல் தகுதி வார நிகழ்ச்சியை கொண்டாடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளி வாழ்க்கையில், உடல் தகுதி ஒரு அங்கமாகிவிட்டது. சுறுசுறுப்பான மாணவர்களுடன், நான் இந்த இயக்கத்தில் இணைவது மகிழ்ச்சிஅளிக்கிறது’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692703
------
(வெளியீட்டு அடையாள எண்: 1692758)
வருகையாளர் எண்ணிக்கை : 193