பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேசத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு பிரதமர் நிதியுதவியை விடுவித்து ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 20 JAN 2021 3:28PM by PIB Chennai

உங்கள் அனைவருக்கும், குறிப்பாக அன்னையருக்கும், சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். மிக விரைவில், நீங்கள் சொந்த வீட்டை, உங்கள் கனவு இல்லத்தை பெறவுள்ளீர்கள். சில நாட்களுக்கு முன்பு, சூரியன் வடதிசையில் நுழைந்துள்ளான். இந்த முறை இது நல்லவற்றுக்கான அனுகூலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த நல்ல காலத்தில், நீங்கள் உங்கள் இல்லத்தைக் கட்டுவதற்கான பணத்தைப் பெற்றால், மகிழ்ச்சி மேலும் பெருகும். சில நாட்களுக்கு முன்பு, நாடு உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கியது. இப்போது, இது உற்சாகத்தை அதிகரிப்பதாக உள்ளது. உங்கள் அனைவருடனும் கலந்துரையாடும் வாய்ப்பை நான் பெற்றேன். நீங்களும் உங்கள் உணர்வுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தீர்கள். உங்கள் முகங்களில் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் என்னால் காணமுடிந்தது. ஒரு பெரும் வாழ்க்கையின் பெரும் கனவு நனவாகியுள்ளது. இதனை உங்கள் கண்களில் என்னால் காண முடிந்தது. உங்கள் மகிழ்ச்சியும், வசதியான வாழ்க்கையும் எனக்கு மிகப்பெரிய ஆசிகளாகும். பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் அனைத்து பயனாளிகளையும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் என்னுடன் இணைந்துள்ள உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் அவர்களே, எனது அமைச்சரவை தோழர் திரு. நரேந்திர சிங் தோமர் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, அனைத்து பயனாளிகளே, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே, வணக்கம். இன்று பத்தாவது குரு கோவிந்த் சிங்கின் பிறந்தநாளாகும். இந்த சுபதினத்தில், அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன். குரு கோபிந்த் சிங் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதுடன்அவருக்கு சேவையாற்ற எனக்கு  நல்வாய்ப்புகளை வழங்கியிருப்பதாகக் கருதுகிறேன்குரு சாஹிப்பின் வாழ்க்கையும், போதனைகளும்  சேவை மற்றும் நேர்மையை பின்பற்றுவதற்கு நம்மை ஊக்குவிப்பதாக உள்ளனசேவை மற்றும் நேர்மையிலிருந்து வெளிப்படும் வலிமையும், வீரமும்குரு கோபிந்த் சிங் காட்டிய வழியில்  நாடு செல்வதற்கு வழிகாட்டுவதாக உள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, .பி.யில் ஆக்ராவில் இருந்து பிரதமர் வீட்டு வசதி திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். இந்தக் குறுகிய காலத்தில், இத்திட்டம் தொடங்கப்பட்டு, நாட்டின் கிராமங்களின் தோற்றத்தை மாற்றத் தொடங்கியுள்ளன. கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகள் இத்திட்டத்துடன் இணைத்துள்ளது. இந்தத் திட்டம் பரம ஏழைகளுக்கும் இன்றில்லாவிட்டாலும் நாளை எனது சொந்த வீட்டைப் பெறுவேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களே, ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதில்வேகமாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரப்பிரதேசம் இருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்இந்த மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, சுமார் ரூ.2,700 கோடி தொகை , அவர்களது வங்கிக் கணக்கில் இன்று நேரடியாகச் செலுத்தப்படுகிறது.    இந்த 6 லட்சம் குடும்பங்களில், 5 லட்சம் குடும்பங்களுக்கு முதல் தவணைத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளனர்சொந்த வீட்டிற்காக வாழ்நாள் முழுவதும் காத்திருந்த நிலை முடிவுக்கு வந்துள்ளதுஅதே போன்று,  80 ஆயிரம் குடும்பங்களுக்கு இரண்டாவது தவணை கிடைக்கப் பெறுவதன் வாயிலாகஅடுத்த குளிர் காலத்திற்குள், அவர்களுக்கு சொந்த வீடு கிடைத்து அனைத்து வசதிகளையும் பெற்று விடுவார்கள்

நண்பர்களே, தற்சார்பு இந்தியா, நாட்டு மக்களின் தன்னம்பிக்கையுடன் தொடர்புடையது. அத்துடன், சொந்த வீடு என்பது இந்த தன்னம்பிக்கையை பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும்.    சொந்த வீடு என்பது, வாழ்க்கையில் உத்தரவாதத்தை அளிப்பதோடு, வறுமையிலிருந்து விடுபடவும் நம்பிக்கை அளிக்கும். சொந்த வீடு வாழ்க்கையில் நிலைத்தன்மையை வழங்குகிறது. வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் வரும் போது, சொந்த வீடு கை கொடுக்கும். முந்தைய அரசுகளின் ஆட்சியின்போது, சொந்த வீடு கட்ட நமக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கைஏழை மக்களிடம் இல்லாமல் இருந்தது.   முந்தைய திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகள், போதிய தரம் இல்லாமல் இருந்தன.   தவறான கொள்கைகளின் விளைவுகளை, ஏழைகள் சுமக்க வேண்டிய அவல நிலை இருந்தது. அதை அவர்கள் தங்கள் தலைவிதியாக கருதினார்கள்இந்த அவல நிலையைக் கருத்திற்கொண்டு தான்நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முன்பாகஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் சொந்த வீடு வழங்கும் நோக்கில்பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டதுகடந்த சில ஆண்டுகளில்நாட்டின் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்பட்டிருப்பதுடன்மத்திய அரசின் 1.5 லட்சம் கோடி ரூபாய் பங்களிப்புடன், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.   மாநிலத்தில் முன்பு ஆட்சி செய்த அரசுகள், இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தாமல் இருந்தன.   உத்தரப்பிரதேசத்தில்,  22 லட்சம் கிராமப்புற வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 21.5 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுஇதில் 14.5 லட்சம் குடும்பங்களுக்கு ஏற்கனவே வீடு கிடைத்து விட்டது, அவற்றில் பெரும்பாலான வீடுகள் தற்போதைய ஆட்சியில் கட்டப்பட்டவை ஆகும்.   

நண்பர்களே, நம் நாட்டில் வீட்டு வசதி திட்டங்களுக்கு  பல ஆண்டுகால வரலாறு உள்ளது. ஆனால்கடந்த காலங்களில் ஏழைகளுக்கு  ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனதிற்கொண்டுசொந்த வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.   இரண்டாவதாக வீடு ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது.   மூன்றாவதாக, வீட்டின் உரிமை  பெரும்பாலும் பெண்களுக்கு அளிக்கப்படுகிறதுநான்காவதாகநவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றனஇறுதியாக, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டைப் பெற முடியும்.   சொந்த வீடு கட்ட முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல், பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் ஏழைக் குடும்பங்கள்உள்ளூர் தொழிலாளர்கள்சிறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு இந்த வீடுகள் பெரிதும்  பலனளிக்கும்.   இந்த வீடுகள் பெரும்பாலும், குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயரில் வழங்கப்படுவதால், இத்திட்டத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கப்படுகிறதுநிலமற்ற குடும்பத்தினர், நிலத்திற்கான ஆவணத்தைப் பெறுவதோடு, தொகை முழுவதும் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதன் வாயிலாக, ஊழல் முறைகேடுகள் தவிர்க்கப்படுகின்றன. எந்த ஏழையும், முறைகேடுகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மத்திய அரசும், .பி. மாநில அரசும் உறுதியாக இருந்ததால், அவை தவிர்க்கப்பட்டுள்ளன.

நண்பர்களே, அடிப்படை வசதிகளைப் பொறுத்த வரை, கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்க  முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நகர்ப்புற மக்களைப் போன்றே கிராமப்புற மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்க  வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எனவே, கழிப்பறை, விளக்கு வசதி, தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளும், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.   அடிப்படை வசதிகளைத் தேடி ஏழை மக்கள் அலையக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்

சகோதர, சகோதரிகளே, கிராம மக்களுக்கு உதவும் மற்றொரு திட்டம் பிரதமரின் ஸ்வமித்வா திட்டமாகும்கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் தலைகீழ் மாற்றத்தை இத்திட்டம் ஏற்படுத்தும்.   இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மாநிலங்களில், உத்தரப்பிரதேசம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறதுஇத்திட்டத்தின்கீழ், வீட்டிற்கான உரிமைப் பத்திரத்துடன் கூடிய நிலத்தை, கிராமப்புற மக்கள் பெறுவார்கள்.   உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஆய்வுப் பணிகளுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதோடுமக்களின் சொத்துக்கள் அரசிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ட்ரோன் உதவியுடன் வரைபடம் தயாரிக்கப்படுவதுடன்நிலப் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.   இந்தத் திட்டத்தின் மிகப் பெரும் பயன் என்னவென்றால்இந்த வீடுகளை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியும்.   இது, கிராமப்புற சொத்துக்கள் மீதான விலையில், ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்தும்.   இம்மாநிலத்தில் உள்ள 8.5 ஆயிரம் கிராமங்களில் ஆய்வுப்பணி  முடிக்கப்பட்டு,  ‘கரோணிஎன்றழைக்கப்படும்  நில அளவைக்குப் பிந்தைய சான்றிதழ் டிஜிட்டல் வடிவில் மக்களுக்கு கிடைக்கும்.   உத்தரப்பிரதேசத்தில் , ஏற்கனவே இதுபோன்ற 51 ஆயிரம் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நண்பர்களே, இன்று கிராமப்புறங்களில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், கிராமப்புற பொருளாதாரம் உத்வேகம் அடைந்துள்ளது. பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் சாலைகள், கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.பி.யில் 60 ஆயிரம் கி,மீ தூரத்துக்கு கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி இழை மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இணைய வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றனஇந்தத் திட்டம், கிராமப்புற மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கொரோனா காலத்தில் சொந்த ஊர் திரும்பிய, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில்,    கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், 10 கோடி மனித வேலை நாட்களை உருவாக்கி, உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறதுஇது, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது

நண்பர்களே, கொரோனா காலம் நாடு முழுமைக்கும், உலகம் முழுமைக்கும், மனித குலத்தில் ஒவ்வொருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், உத்தரப்பிரதேசம் தனது முயற்சிகளைக் கைவிடவில்லை. தொடர்ந்து, அதி வேகத்தில் பணிகளை மேற்கொண்டது. வாழ்க்கையை எளிதாக்க, ஆயுஷ்மான் பாரத், தேசிய ஊட்டச்சத்து இயக்கம், உஜாலா திட்டம் போன்ற பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் திட்டங்கள் உத்தரப்பிரதேசத்திற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதிவிரைவுச் சாலைகள் மற்றும் எய்ம்ஸ் போன்ற திட்டங்கள் உத்தரப்பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.   இந்தத் திட்டங்கள் அனைத்தும், உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவியிருக்கின்றன.   இதன் காரணமாகவே, தற்போது பல பெரிய நிறுவனங்கள் உத்தரப்பிரதேசத்தில் முதலீடு செய்ய முன்வருகின்றன.  ‘ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் உற்பத்திஎன்ற திட்டத்தின் மூலம், சிறிய நிறுவனங்களுக்கும் உரிய வாய்ப்பு கிடைத்துள்ளதுஇதன் மூலம் உள்ளூர் கைவினைஞர்கள் பலனடைந்து வருகின்றனர்

உத்தராயணத்துக்கு பிந்தைய காலம் உங்களது வாழ்க்கை கனவுகளை நனவாக்கட்டும். சொந்த வீடு என்னும் கனவு நனவாகும் போது, குழந்தைகளின் வாழ்க்கையும், அவர்களது பள்ளிப் படிப்பும் மாறும். என்னை வாழ்த்திய அன்னையர் மற்றும் சகோதரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

*********************

 



(Release ID: 1692495) Visitor Counter : 198