ரெயில்வே அமைச்சகம்

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பிரத்தியேக சரக்கு தடங்களின் முன்னேற்றத்தை ரயில்வே அமைச்சர் திரு பியுஷ் கோயல் ஆய்வு செய்தார்

Posted On: 25 JAN 2021 6:45PM by PIB Chennai

கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பிரத்தியேக சரக்கு தடங்களின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில் மற்றும் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியுஷ் கோயல் இன்று ஆய்வு செய்தார்.

அனைத்து பிரிவுகளிலும் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், சில பிரிவுகளில் ரயில்வே எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

பிரத்தியேக சரக்கு தடத்தின் முழு பலனையும் உறுதி செய்வதற்காக கடைசி மைல் இணைப்பு வரை, இணைப்பு தடங்களுக்கான பணிகளை ஒரே சமயத்தில் முடிப்பது அவசியம் என்று அமைச்சர் கூறினார். திட்ட மேம்பாட்டை முழு ஈடுபாட்டுடன் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்சார்பு இந்தியா பிரச்சாரத்திற்கு ஊக்கம் அளிப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து சரக்கு போக்குவரத்து மற்றும் பிரத்தியேக சரக்கு தடங்களை துரிதமாக உள்நாட்டுமயமாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

சரக்கு ரயில் போக்குவரத்து விரைந்து நடைபெறுவதற்காக பிரத்தியேக சரக்கு தடங்களை இந்திய ரயில்வே அமைத்து வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு தடங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி ஏற்கனவே நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேற்கு தடத்தின் ரேவாரி-மடார் பிரிவு மற்றும் கிழக்கு தடத்தின் புது குர்ஜா-புது பாவ்பூர் பிரிவு இவையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692194

**********************




(Release ID: 1692336) Visitor Counter : 156


Read this release in: English , Urdu , Hindi , Manipuri