தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பாரத் பர்வ் 2021 என்ற தேசிய கண்காட்சிக்கு தயாராகிறது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் பிரசார் பாரதி
இடுகை இடப்பட்ட நாள்:
25 JAN 2021 6:03PM by PIB Chennai
பாரத் பர்வ் 2021, என்ற தேசிய கண்காட்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் பிரசார் பாரதி ஆகியவை தயாராகி வருகின்றன.
குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, பாரத் பர்வ் என்ற பிரம்மாண்ட தேசிய கண்காட்சி தில்லி செங்கோட்டை வளாகத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது. கொவிட் தொற்று சூழல் காரணமாக இந்தாண்டு, பாரத் பர்வ் நிகழ்ச்சியை மெய்நிகர் மூலம் மத்திய சுற்றுலாத்துறை நடத்துகிறது.
இந்த கண்காட்சியில், தேசிய ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி தனது
அரங்கத்தை அமைக்கிறது. தனது நிகழ்ச்சிகள் மூலம் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை வெளிப்படுத்தும். மெய்நிகர் அரங்கத்தின் காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பதிப்பகப் பிரிவும், இந்த மெய்நிகர் கண்காட்சியில் பங்கெடுக்கும். இதில் கலை, கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் குறித்த புத்தகங்கள், நவீன இந்தியாவை உருவாக்கியவர்களின் வாழ்க்கை வரலாறுகள், ஒரே பாரதம், உன்னத பாரம் தொடர்களின் புத்தகங்கள் இடம் பெறும்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின கண்காட்சியில் இடம் பெற்ற போட்டோக்கள், வீடியோக்கள், அனிமேஷன், ஆகியவற்றை பாரத் பர்வ் நிகழ்ச்சிக்கு, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கள தகவல் தொடர்பு அலுவலகம் கொண்டு வருகிறது. பாரத் பர்வ் நிகழ்ச்சிகளை www.bharatparv2021.com என்ற இணையம் மூலம் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692239
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1692322)
வருகையாளர் எண்ணிக்கை : 267