நிதி அமைச்சகம்
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை கிளையை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்
Posted On:
25 JAN 2021 5:57PM by PIB Chennai
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை கிளையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தலைவர் நீதிபதி திரு பன்சி லால் பட், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு ராஜேஷ் வர்மா, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் ஐந்து கிளைகள் ஜெய்ப்பூர், கட்டாக், கொச்சி, இந்தூர் மற்றும் அமராவதியில் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம், முதன்மை அமர்வோடு சேர்த்து, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மொத்த அமர்வுகளின் எண்ணிக்கை 16 அதிகரித்துள்ளது.
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் கிளையை சென்னையில் அமைப்பதற்கான மத்திய அரசின் முடிவு நாட்டின் தென் மாநிலங்களில் உள்ள வழக்குதாரர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று நிதி அமைச்சர் கூறினார். தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஆஜராவதற்கும், மேல்முறையீடுகளை வாதிடுவதற்கும் இத்தனை நாட்களாக தில்லிக்கு அவர்கள் கடும் சிரமங்களுக்கிடையே பயணம் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692234
**********************
(Release ID: 1692311)
Visitor Counter : 245