குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
25 JAN 2021 4:58PM by PIB Chennai
குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில், அரசியலமைப்பு மற்றும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் அனைவருக்குமான நீதி அடிப்படையிலான நமது குடியரசின் அடிப்படை கொள்கைகளை நாம் மீண்டும் உறுதி செய்ய வேண்டும். வலுவான ஜனநாயகத்துக்கு தேவையான அறிவார்ந்த மக்களை உருவாக்குவதற்கு, நமது அரசியலமைப்பு மதிப்புகள், அடிப்படை கொள்கைகளாக உள்ளன.
இன்று, இந்தியா அனைத்து கட்ட வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறது. நமது ஜனநாயகம் துடிப்பானது மற்றும் நல்ல நிர்வாகத்துக்கான நமது உறுதி மற்றும் வெளிப்படைத்தன்மை முன்பை விட வலுவாக உள்ளது. இந்த புனிதமான நாளில், நமது நாட்டின், நாகரீக கருத்துக்களை, அரசியலமைப்பு மதிப்புகளை மீண்டும் புதுப்பிப்போம் மற்றும் ஒருங்கிணைந்த, அமைதியான மற்றும் முன்னேற்றமான இந்தியாவை உருவாக்குவோம் என உறுதி ஏற்போம்.
இந்த மகிழ்ச்சியான நாளில், நமது குடியரசின் சாதனைகளை கொண்டாடுவோம், மற்றும் உலக அமைதிக்கும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் தொடர்ந்து பங்களிக்கும் நமது நாடு அதிக தன்னம்பிக்கையுடனும் மற்றும் தற்சார்பு இந்தியாவாகவும் உருவாக்குவதற்கு நம்மை அரப்பணிக்க தீர்மானிப்போம் என அவர் கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692195
**********************
(Release ID: 1692277)
Visitor Counter : 154