சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

நாளைய குடியரசு தின அணி வகுப்பில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறையின் அலங்கார ஊர்தியில் ‘இந்திய சைகை மொழி’ சிறப்பு கவனத்தை ஈர்க்கும்

प्रविष्टि तिथि: 25 JAN 2021 4:33PM by PIB Chennai

தில்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறையின் அலங்கார ஊர்தியில் இந்திய சைகை மொழிசிறப்பு கவனத்தை ஈர்க்கவுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் நாளை நடைபெறும் அணி வகுப்பில், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறையின் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. இதில் தேசிய சைகை மொழி - ஒரே நாடு, ஒரே சைகை மொழிஎன்ற கருப்பொருள் சைகை மூலமாக விளக்கப்படும்.

பல மொழிகள் பேசப்படும் நாட்டில், இந்திய சைகை மொழியின் ஒன்றிணைக்கும் பண்பை இது சுட்டிக் காட்டும். இந்த அலங்கார ஊர்தியின் நோக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் இந்திய சைகை மொழியின் மூலம், காது கேளாதோருக்கு புரிந்துக்கொள்ளும் சூழலை உருவாக்குவதில் அரசு உறுதியுடன் உள்ளது என்பதை காட்டுவதே இந்த அலங்கார ஊர்தியின் நோக்கம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692184

**********************


(रिलीज़ आईडी: 1692271) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi