உள்துறை அமைச்சகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வீரதீர / சேவை பதக்கங்கள்

Posted On: 25 JAN 2021 2:08PM by PIB Chennai

2021-ஆம் ஆண்டு குடியரசு தின பதக்கங்களுக்கு மொத்தம் 946 காவல் துறையினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:

வீரதீர பதக்கங்கள்

வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் விருது - 02

காவல் துறை வீரதீர விருதுகள் - 205

சேவை விருதுகள்

திறம்பட சேவையாற்றியதற்கான குடியரசுத் தலைவரின் விருது -  89

திறம்பட சேவையாற்றியதற்கான காவல் துறை விருதுகள் - 650

 

கூடுதல் காவல் துறை தலைவர்/பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் காவல் துறை தலைவர், தொழில்நுட்ப சேவை, சென்னை, திரு எஸ் டேவிட்சன் தேவாசிர்வாதம், மற்றும் திரு பி மணிகண்டகுமார், ஆய்வாளர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை IV, கோவை புதூர் ஆகியோர் திறம்பட சேவையாற்றியதற்கான குடியரசுத் தலைவரின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

207 வீரதீர விருதுகளில் இரண்டு ஜார்கண்ட் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையை சேர்ந்த வீரர்களுக்கு அவர்களது மறைவுக்குப் பின் வழங்கப்படுகிறது. 137 பேர்களுக்கு ஜம்மு & காஷ்மீரில் அவர்களது துணிச்சல் மிகுந்த பணிக்காக வழங்கப்படுகிறது. 24 வீரர்களுக்கு இடது சாரி தீவிரவாதம் நிறைந்த பகுதிகளில் அவர்கள் ஆற்றிய தீரம் மிகுந்த செயல்களுக்காகவும், ஒருவருக்கு வடகிழக்கு பகுதியில் அவர் ஆற்றிய சேவைக்காகவும் வழங்கப்படுகிறது.

வீரதீர விருதுகளை பெறுபவர்களில் 68 பேர் மத்திய ரிசர்வ் காவல் படையையும், 20 நபர்கள் எல்லை பாதுகாப்பு படையையும், 17 பேர் தில்லி காவல் துறையையும், 13 நபர்கள் மகாராஷ்டிராவையும், 08 நபர்கள் சத்திஸ்கரையும், இன்னும் 08 பேர் உத்தரப் பிரதேசத்தையும், மீதமிருப்போர் இதர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மத்திய காவல் படைகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692134

**********************



(Release ID: 1692229) Visitor Counter : 166