உள்துறை அமைச்சகம்

2021ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட ஊர் காவல் படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்

Posted On: 25 JAN 2021 12:30PM by PIB Chennai

குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஒன்வொரு ஆண்டும் தீயணைப்புத்துறை, உள்நாட்டு பாதுகாப்புப் படையினர், ஊர்காவல் படை ஆகியவற்றில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கும், சிறப்பாகவும், பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றியவர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதக்கங்கள்  வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, தீயணைப்பு படையைச் சேர்ந்த 73 பேருக்கு குடியரசு தலைவரின் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மறைந்த வீரர் ராஜ்குமார் ராஜேந்திரன் உட்பட 8 பேருக்கு குடியரசுத் தலைவரின் தீயணைப்பு துறை வீரதீர பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீரத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட்ட 2 வீரர்களுக்கு தீயணைப்புத்துறை வீரதீர விருதுகள் வழங்கப்படுகின்றன.

தீயணைப்புத் துறையை சேர்ந்த 13 வீரர்களுக்கு சிறப்பு சேவை விருதுகள் வழங்கப்படுகின்றனதமிழகத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி திரு ராதாகிருஷ்ணன் அழகிரிசாமி ராஜூ, திரு அங்கமுத்து முத்துசாமி, டிரைவர் மெக்கானிக் திரு முரளிதரன் , தீயணைப்புத்துறை டிரைவர் திரு செல்லபாண்டி பிச்சை ஆகியோர் உட்பட 50 பேருக்கு போற்றத்தக்க வகையில் செயல்பட்டதற்காக குடியரசு தலைவரின் தீயணைப்புத்துறை பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

மேலும், ஊர்காவல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புப் படை வீரர்கள் 54 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் வீரதீர விருது 3 பேருக்கும், பேற்றத்தக்க வகையில் செயல்பட்ட ஊர்காவல் படையைச் சேர்ந்த 4 பேருக்கும், உள்நாட்டுப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 47 பேருக்கும் குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692103



(Release ID: 1692197) Visitor Counter : 170