சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் 16,00,000-க்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

Posted On: 24 JAN 2021 7:59PM by PIB Chennai

நாடு தழுவிய மிகப்பெரும் கொவிட்-19 தடுப்பூசித்  திட்டத்தின் ஒன்பதாம் நாளில் 5 மாநிலங்களில் 31, 000-க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று மாலை 7:30 மணி வரை தமிழகம் (2,494), ஹரியானா (907), கர்நாடகா (2,472), பஞ்சாப் (1,007), ராஜஸ்தான் (24,586) ஆகிய 5 மாநிலங்களில் 31,466 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மாலை 6:30 மணி வரை 693 முகாம்கள் நடைபெற்றன.

இன்று மாலை 7:30 மணி வரை இது வரை மொத்தமாக 28,613 முகாம்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான (16,13,667) சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 61,720 பயனாளிகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர்.

இறுதி தகவல்கள் இன்று பின்னிரவு கிடைக்கும்.

இன்று மாலை 7:30 மணி வரை தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களில் வெறும் 10  பேருக்கு சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691970

**********************


(Release ID: 1692004) Visitor Counter : 241