உள்துறை அமைச்சகம்

போடோ நில பிராந்திய பகுதி ஒப்பந்தத்தின் முதலாம் ஆண்டு விழாவில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்பு

Posted On: 24 JAN 2021 6:37PM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்க போடோநில பிராந்திய பகுதி ஒப்பந்தத்தின் முதலாம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அசாமின் கோக்ரஜாரில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்து கொண்டார். அசாம் முதல்வர் திரு சர்பானந்தா சோனோவால், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கையெழுத்திடப்பட்ட போடோநில பிராந்திய பகுதி அமைதி ஒப்பந்தத்தின் வாயிலாக வட கிழக்கு மாகாணங்களில் அமைதியற்ற சூழல் உருவாகும்போது அனைத்து பிரிவு மக்களுடனும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அமைதி நிலைநாட்டப்படுவதாககூறினார். பல ஆண்டுகளாக போடோ பகுதியில் நிலவிவந்த பிரச்சினைகளால் 5000-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் திரு மோடியின் முயற்சியாலும், வழிகாட்டுதலாலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டு, இந்தப் பகுதி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் வளர்ச்சி அடைவோம்' என்ற தாரக மந்திரத்தின் மூலம் இந்தியா தற்சார்பு அடையவும், போடோ பகுதியின் கலாச்சாரத்தைப் பாதுகாத்து அதனை மேம்படுத்தும் பாதையில் பயணிக்க முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கை கொண்டிருப்பதாக திரு அமித் ஷா தெரிவித்தார். முறையான வளர்ச்சியின் வாயிலாக அசாமில் சுற்றுலா வரத்து அதிகரிக்கும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சியுடன் ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதியும் வளர்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691913

*******************



(Release ID: 1691992) Visitor Counter : 179