பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தினவிழா அணிவகுப்பில், டிஆர்டிஓ தயாரிப்புகள் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
24 JAN 2021 5:35PM by PIB Chennai
தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணி வகுப்பில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின்(டிஆர்டிஓ) தயாரிப்புகள் அலங்கார ஊர்திகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் டிஆர்டி தயாரிப்புகள் அலங்கார ஊர்திகளில் கொண்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் டிஆர்டிஓ தயாரிப்புகள் கொண்டு செல்லப்படுகின்றன.
கடற்படை பயன்பாட்டுக்கு தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானம், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பலில் தரையிறங்கி, ஏறியது. இந்த சாதனையை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்தி, டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள், ஆகாஷ் மற்றும் அஸ்த்ரா ஏவகணைகளை எடுத்து செல்லும் விமானப்படை அலங்கார ஊர்திகளும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கின்றன.
முப்படைகளுக்கும் தேவையான தளவாடங்களை டிஆர்டிஓ உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்து, தற்சார்பு இந்தியா உணர்வை வெளிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691896
**********************
(रिलीज़ आईडी: 1691965)
आगंतुक पटल : 333