கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய கடல்சார் லட்சியம்-2030 விரைவில் செயல்படுத்தப்படும்: திரு மன்சுக் மண்டாவியா
Posted On:
23 JAN 2021 5:41PM by PIB Chennai
மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தலைமையில் அனைத்து முக்கிய துறைமுகங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், குஜராத்தின் கட்ச்சில் உள்ள தி டெண்ட் சிட்டி-தோர்டோவில் 2021 ஜனவரி 21 முதல் 23 வரை இந்த விரிவான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவின் ஒட்டுமொத்த கடற்பரப்பையும் ஒருங்கிணைத்து நகர்ப்புற போக்குவரத்துக்கான கடலோர வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. அனைத்து முக்கிய துறைமுகங்களின் அவசியம் மற்றும் முக்கியமில்லா சொத்துகளை சிறப்பாக பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், பெரிய தரவு, புவி வேலி, துறைமுகங்களில் தரவு சார்ந்த போக்குவரத்து மேலாண்மை, ஐஓடி சார்ந்த சரக்குந்துகள் மேலாண்மை மற்றும் சரக்கு போக்குவரத்தை ஜிஐஎஸ் மூலம் கண்காணித்தல் போன்ற முக்கிய துறைமுகங்களை திறன்மிகு துறைமுகங்களாக மாற்றக்கூடிய பல்வேறு தொழில்நுபங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நிறைவுரை ஆற்றிய திரு மன்சுக் மண்டாவியா, இந்திய கடல்சார் லட்சியம்-2030 தயாராக உள்ளதென்றும், விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். “இந்தியாவின் கடல்சார் பெருமையை மீட்டெடுப்பதே நமது லட்சியம். இந்த ஆலோசனை கூட்டத்தின் மூலம் அனைத்து முக்கிய துறைமுகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்பட்டு, பொது இலக்குகளை நோக்கி பணியாற்ற முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே
காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691608
**********************
(Release ID: 1691659)
Visitor Counter : 201