தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் மனித இணைப்புகள் அருகி வருவது குறித்த கேள்விக்கான என்னுடைய விடை தான் ‘தி பார்டர்’: இயக்குநர் டேவிடே டேவிட்

நாம் தடுப்பு வேலிகளை எழுப்பிக் கொண்டே வருகிறோம், நாம் நம்மை தனிமைப்படுத்தி வருகிறோம் என்பதை திரைப்படத்தில் நான் காட்ட முயற்சித்தேன்,” என்று தி பார்டர்திரைப்படத்தின் இயக்குநர் டேவிடே டேவிட் கூறினார்.

கோவாவில் நடைபெற்று வரும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் இன்று பேசிய இயக்குநர்  டேவிடே டேவிட் இவ்வாறு கூறினார்.

பெண் ஒருவரின் கதையின் மூலமாக கொலம்பியா மற்றும் வெனிசுலாவுக்கு இடையேயான அரசியல் நெருக்கடி குறித்து பேசும் அவரது திரைப்படத்தின் ஆசிய சிறப்புக் காட்சி 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 2021 ஜனவரி 22 அன்று திரையிடப்பட்டது.

உலகமயமாக்கப்பட்ட உலகத்தில் மனித இணைப்புகள் அருகி வருவது குறித்த கேள்விக்கான என்னுடைய விடை தான் தி பார்டர்என்று கூறிய டேவிடே டேவிட், இத்த்ரைப்படத்தின் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் படத்தொகுப்பாளரும் ஆவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே

காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691292

************************


(Release ID: 1691409)