சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
உத்தரப் பிரதேசம் லக்னோவில், 24வது கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடங்கியது
प्रविष्टि तिथि:
22 JAN 2021 3:04PM by PIB Chennai
உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள அவாத் சில்ப் கிராமத்தில், 24வது கைவினைப் பொருட்கள் கண்காட்சி இன்று முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து பேட்டியளித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:
இந்த கண்காட்சியை உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். இதில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 500 கலைஞர்கள் தங்கள் தயாரிப்பு பொருட்களை காட்சிக்கு வைக்கின்றனர்.
இங்கு விற்கப்படும் பொருட்களை http://hunarhaat.org என்ற இணையளம் மூலமாக மக்கள் வாங்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691203
**************
(रिलीज़ आईडी: 1691351)
आगंतुक पटल : 220