ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் 5 நிறுவனங்களுக்கு ஒப்புதல்
Posted On:
22 JAN 2021 1:50PM by PIB Chennai
உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்காக, உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், 5 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பொருட்கள் மற்றும் தீவிர மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் 5 நிறுவனங்கள் புதிய ஆலைகள் தொடங்க மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. ஆண்டு உற்பத்தியை குறைந்தபட்சத்துக்கு அதிகமாக உற்பத்தி செய்வதாக இந்நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களை இந்நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளதால், இந்த 5 நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலைகள் அமைப்பதன் மூலம் மொத்தம் ரூ.3,761 கோடிக்கு முதலீடு செய்யப்படும் மற்றும் 3,825 வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த ஆலைகள் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பாக அடுத்த 6 ஆண்டுகளுக்கு அரசு வழங்கம் தொகை அதிகபட்சமாக ரூ.3,600 கோடியாக இருக்கும். இந்த ஆலைகள் அமைப்பது, மருந்து பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்யவும், நாட்டை தற்சார்புடையதாகவும் மாற்றும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து தற்சார்பு இலக்கை அடையவும், முக்கிய மருந்து பொருட்களின் ஏற்றுமதியை குறைக்கவும், மருந்துகள் துறை, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தை தொடங்கியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691185
**********************
(Release ID: 1691323)