தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘லாங் டைம் நோ சீ’ போன்ற திரைப்படங்களை இயற்கை எழில் கொண்ட பகுதிகளில் படமாக்க வேண்டும், அரங்கங்கள் உண்மைத்தன்மையை குறைக்கின்றன: இயக்குநர் பியர் ஃபில்மோன்
இயக்குநர் பியர் ஃபில்மோனின் ‘லாங் டைம் நோ சீ’ திரைப்படம் இரண்டு மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை காட்டுகிறது. சிறிது காலம் காதலித்த இருவர், ஒன்பது வருடங்களுக்கு பிறகு ரயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக சந்திக்கின்றனர். செலவிட வெறும் 80 நிமிடங்களே அவர்களிடம் இருக்கின்றன.
கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஃபில்மோன், “படப்பிடிப்பிற்கு வெறும் ஐந்து நாட்களே தேவைப்பட்டதென்றாலும், இந்த திரைப்படத்தை எழுதுவதற்கு நிறைய வருடங்கள் எனக்கு தேவைப்பட்டது,” என்று அவர் கூறினார்.
51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் உலக பனோரமா பிரிவில் பியர் ஃபில்மோனின் ‘லாங் டைம் நோ சீ’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “கோவாவில் எங்களது திரைப்படத்தை திரையிடுவது மிகவும் பெருமையளிக்கிறது,” என்றார்.
தான் நான்கு வருடங்களுக்கு முன் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டதாகவும், மீண்டும் கலந்து கொள்வது நீண்ட நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பியது போல் உள்ளது என்று அவர் கூறினார்.
‘லாங் டைம் நோ சீ’ போன்ற திரைப்படங்களை இயற்கை எழில் கொண்ட பகுதிகளில் படமாக்க வேண்டும், அரங்கங்கள் உண்மைத்தன்மையை குறைக்கின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1690940
**********************
(Release ID: 1691032)
Visitor Counter : 238