தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அகிம்சை பற்றிய காந்தியின் கருத்து உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தை ‘அகிம்சை- காந்தி: சக்தியற்றவர்களின் சக்தி’ படம் எடுத்துரைக்கிறது: இயக்குநர் திரு ரமேஷ் ஷர்மா

Posted On: 21 JAN 2021 2:42PM by PIB Chennai

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் 51 இந்திய  பனோரமா படமான அகிம்சை- காந்தி: சக்தியற்றவர்களின் சக்தி’, அகிம்சையின் வலிமையையும் தற்போதுவரை அதற்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.  அகிம்சை தொடர்பான காந்தியின் கருத்து சர்வதேச அளவில்:  உலக தலைவர்களிடையேயும், அமெரிக்காவின் சிவில் உரிமை இயக்கத்திலும், போலந்து ஒற்றுமை இயக்கத்திலும், திரு நெல்சன் மண்டேலாவிடமும், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிறவெறிக்கு எதிரான போராட்டத்திலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை இந்தப் படம் வெளிப்படுத்துகிறது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டும், அறவழியிலான இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக அவரை கௌரவிக்கும் வகையிலும்  எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் இயக்குநர் திரு ரமேஷ் ஷர்மா இவ்வாறு கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்றுவரும் 51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் காணொலி வாயிலாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அகிம்சை- காந்தி வெறும் படம் மட்டுமல்ல, அது ஒரு வேட்கை என்று அதன் இயக்குநர் கூறினார். மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் சர்வதேச அளவில் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதை இந்தப்படம் நினைவுபடுத்துகிறது, அகிம்சையை சக்திவாய்ந்த கருவியாக பயன்படுத்திய காந்தியின் கருத்து எவ்வாறு  கடல் கடந்து அனைவரையும் சென்றடைந்தது என்பதை இது எடுத்து காட்டுகிறது. இன்றும் நியாயத்திற்காகப் போராடும் சமுதாயங்களுக்கு அது உத்வேகத்தை வழங்குகிறது”, என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690834

*******************



(Release ID: 1690998) Visitor Counter : 648