தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நகர வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையை விவரிக்கிறது ‘அகாசா - மை ஹோம்’ : இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரோமானிய இயக்குனர் ராது சியோர்னிக் பேட்டி
நகர வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட ஒரு குடும்பத்தின் கதையை விவரிக்கிறது ‘அகாசா - மை ஹோம்’ என இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் ராது சியோர்னிக் கூறினார்.
51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறுகிறது. இதில் ரோமானிய இயக்குனர் ராது சியோர்னிக் இயக்கிய குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த படம் குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரோமானியா தலைநகர் புகாரெஸ்ட்டுக்கு அருகேயுள்ள டெல்டா பகுதியில், ஒரு குடும்பம் 9 குழந்தைகளுடன் 20 ஆண்டுகளாக இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த பகுதியில் அரிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியதால், அந்த பகுதியை ரோமானிய அதிகாரிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.
இதையடுத்து அந்த குடும்பம் நகர வாழ்க்கைக்கு தள்ளப்பட்டது. அங்கு அரசு மற்றும் சமூக விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் வாழ நேர்ந்தது. இதனால் அந்த குடும்பம் அமைதியான வாழ்க்கையை இழந்தது.
பத்திரிக்கையாளராக, நான் இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கலாம். ஆனால், நான் அவர்களின் வாழ்க்கையை ஒரு குறும்படமாக தயாரித்தேன். இந்த படத்தை எடுத்த பிறகு, நாங்களும் நகரத்தை விட்டு வெளியேறி, இயற்கையுடன் இணைந்து வாழ முடிவெடுத்தோம். அந்த அளவுக்கு இந்த குறும்படம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு இயக்குனர் ராது சியோர்னிக் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690879
**
(Release ID: 1690967)