அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பால்வெளியில் இருக்கும் அரிதான நட்சத்திரங்களை அஸ்ட்ரோசாட்டின் புறஊதா தொலைநோக்கி கண்டறிந்துள்ளது

Posted On: 21 JAN 2021 3:42PM by PIB Chennai

நமது பால்வெளியில் உள்ள என்ஜிசி 2808 எனப்படும் புதிரான, உருண்டையான, குறைந்தது ஐந்து தலைமுறைகள் நட்சத்திரங்களை கொண்ட மிகப்பெரிய விண்மீன் தொகுப்பை ஆராய்ந்து வரும் வானியலாளர்கள், அரிதான, சூடான மற்றும் வெளிச்சம் நிறைந்த புற ஊதா நட்சத்திரங்களை அதில் கண்டறிந்துள்ளனர்.

அவைகளின் உட்பரப்பு ஏறத்தாழ முழுவதும் வெளிவந்த நிலையில், மிகவும் சூடாக இருக்கும் இந்த நட்சத்திரங்கள், சூரியன் போன்ற விண்மீன் உருவாவதற்கான இறுதி கட்டங்களில் இருக்கின்றன. இது போன்ற வேகமாக உருவாகும் கட்டங்களில் அதிகளவில் விண்மீன்கள் இது வரை கண்டறியப்படாததால், இவற்றின் முடிவு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. இதனால், இவற்றின் மீதான ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகளான தீப்தி எஸ் பிரபு, அன்னப்பூரணி சுப்பிரமணியம் மற்றும் சினேகலதா சாஹு ஆகியோர் புற ஊதா படப்பதிவு தொலைநோக்கியின் தரவுகளை, ஸ்பேஸ் தொலைநோக்கி, காயா தொலைநோக்கி மற்றும் தரையில் இருந்து செய்யப்பட்ட ஒளியியல் ஆய்வு போன்ற இதர ஆராய்ச்சிகளின் கண்டறிதல்களோடு ஒன்றிணைத்துள்ளனர். உருண்டையான தொகுப்பில் வெளிச்சம் மிகுந்த சுமார் 34 விண்மீன்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690854

***


(Release ID: 1690966) Visitor Counter : 222


Read this release in: English , Urdu , Hindi , Punjabi