நித்தி ஆயோக்
நகர்ப்புறப் பகுதிகளில் மனிதக் கழிவு மேலாண்மை குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது
Posted On:
20 JAN 2021 5:01PM by PIB Chennai
நகர்ப்புற பகுதிகளில் மனிதக் கழிவு மற்றும் கழிவு மேலாண்மை குறித்த புத்தகத்தை செவ்வாய் அன்று நிதி ஆயோக் வெளியிட்டது. தேசிய மலக்கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மை அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புத்தகம், மலம், கழிவு மேலாண்மைக்கு 10 மாநிலங்களில் உள்ள நகரங்களால் பயன்படுத்தப்படும் சேவை, வணிக மாதிரிகள் குறித்த 27 ஆய்வுகள் குறித்த விவரங்களை வழங்குகிறது.
காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி திரு அமிதாப் காந்த், மத்திய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா, நிதி ஆயோக் கூடுதல் செயலாளர் டாக்டர் கே ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இந்த புத்தகத்தை வெளியிட்டனர்.
“தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளின் காரணமாக, 70 லட்சம் கழிவறைகள் நகர்ப்புற பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம், கழிவு மேலாண்மையில் இது வரை இல்லாத அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது,” என்று திரு அமிதாப் காந்த் கூறினார்.
66 லட்சம் வீட்டு கழிவறைகளும், ஆறு லட்சம் சமுதாய மற்றும் பொது கழிவறைகளும் கட்டப்பட்டிருப்பதன் மூலம், நாட்டின் நகர்ப்புறங்களில் அனைவருக்கும் கழிவறை வசதி கிடைத்திருக்கிறது.
வீடுகளில் உள்ள கழிவு மேலாண்மை அமைப்புகளை 60 சதவீத நகர்ப்புற வீடுகள் சார்ந்திருப்பதாகவும், இவற்றில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளின் மேலாண்மைக்கு விரிவான திட்டமிடல் தேவையென்றும் இந்த அறிக்கை கூறுகிறது. நோய்களைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மனிதக் கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690414
************************
(Release ID: 1690526)
Visitor Counter : 272