வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

நாட்டின் தளவாட செயல்திறன் மேம்பாடு: மத்திய, தனியார் துறையுடன் மாநிலங்கள் இணையவுள்ளன

Posted On: 20 JAN 2021 4:47PM by PIB Chennai

மத்திய, மாநில அரசுகள் தளவாடத் துறையில் இணைந்து பணிபுரிவதற்கான ஆலோசனைகளையும் திட்ட வடிவங்களையும் உருவாக்குவதற்காக ஜனவரி 19-ஆம் தேதி, மத்திய வர்த்தகத்துறை, மாநிலங்களின் முதலாவது தளவாட மாநாட்டை நடத்தியது. மத்திய, மாநில, யூனியன் பிரதேச அமைச்சகங்கள், தொழில் துறைகளைச் சேர்ந்த 175க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நாட்டின் தளவாட செயல்திறனை மேம்படுத்துவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தளவாடங்களை மேம்படுத்துவதற்கான 18 அம்சங்கள் பொருந்திய விரிவான திட்ட நிரல் மாநிலங்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் தேசிய தளவாடக் கொள்கை, இந்தத் துறையில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும் என்று கூறினார். எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக தொழில்நுட்பத் தளங்கள் வாயிலாக போக்குவரத்துஆவணங்கள், பங்குதாரர்களை ஒருங்கிணைக்க வர்த்தகம், தொழில் அமைச்சகத்தின் தளவாடக் குழு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் முதுகெலும்பான தளவாட சூழலியலை வலுப்படுத்த வேண்டுமென்று வர்த்தகம், தொழில் துறை இணை அமைச்சர் திரு சோம் பர்காஷ் வலியுறுத்தினார். தற்போதுள்ள 13 சதவிகிதத்திலிருந்து தளவாட விலையை 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று கூறிய அவர், இதன் மூலம் இந்திய வர்த்தகத்தை போட்டித்தன்மை நிறைந்ததாக  மாற்றமுடியும்;   வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; இந்தியாவின் தரவரிசை மேம்படும்; சர்வதேச விநியோகச் சங்கிலியில் இந்தியா தளவாட முனையமாக மாறும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வர்த்தகம், தொழில் துறை இணை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி, நகர தளவாடங்களுடன்  தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கும் அமைப்புசார் முறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690408

**********************



(Release ID: 1690513) Visitor Counter : 205