அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
2020ல் உயிரி தொழில்நுட்பத் துறையின் முக்கிய சாதனைகள்
Posted On:
19 JAN 2021 12:31PM by PIB Chennai
* உயிரி அறிவியல் ஆராய்ச்சி, மேம்பாட்டு கல்வி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை வளர்க்க உயிரி தொழில்நுட்பத்துறை மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
* வேளாண்மை, உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, குறைந்த கட்டணத்தில் சுகாதார வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுத்தமான எரிசக்தி ஆகிய துறைகளில், மேம்பட்ட செயல்திறன், உற்பத்தித்திறன், சிக்கனம் ஆகியவற்றுக்காக பயோடெக் தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு உயிரி தொழில்நுட்பத் துறை முக்கியத்துவம் அளித்துள்ளது. இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
* பிரதமர் தொடங்கிய சரியான உணவை உண்ணுதல், தூய்மை இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற தேசிய திட்டங்களுக்கு, உயிரி தொழில்நுட்பத் துறை பல நிகழ்ச்சிகள் மூலம் பங்களித்துள்ளது.
*தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள், நோயறிதல், மரபியல், மற்றும் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான தேசிய தளம் (என்.பி.ஆர்.ஐ.சி) ஆகியவற்றுக்கு உதவியன் மூலம் கொவிட் தொற்றுநோயைக் குறைக்க உயிரி தொழில்நுட்பத் துறை பணியாற்றியுள்ளது.
* அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், 1642 திட்டங்களுக்கு மேல் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. 2731 விஞ்ஞானிகள், 5145 ஆராய்ச்சி மாணவர்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்டார் கல்லூரி திட்டம் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். மீண்டும் ஆராய்ச்சியில் இணைந்த 40 பேர் முறையான நியமனம் பெற்றனர். சமூகத் திட்டங்கள் மூலம் 20,000 கிராமவாசிகள், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் பயனடைந்தனர். உயிரி தொழில்நுட்ப கிசான் திட்டம் மூலம் 25,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர்.
* வேளாண்மை, குறைந்த கட்டணத்தில் சுகாதார வசதி, சுத்தமான எரிசக்தி, அதிநவீன அறிவியல் ஆகியவற்றை புத்தாக்க தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்த அடல் ஜெய் அனுசந்தன் திட்டத்தை உயிரி தொழில்நுட்ப துறை அமல்படுத்தியது.
* புதிய எதிர் உயிரிகளை உருவாக்குவதல், எதிர் உயிரிகளுக்கான மாற்றுகள் ஆகியவற்றை உருவாக்குவதில் ஏஎம்ஆர் (எதிர்ப்பு நுண்ணியிரி தடுப்பு) திட்டம் கவனம் செலுத்தியது.
* குறைவான செலவில், செயல்திறன் மிக்க கொவிட்-19 தடுப்பூசி உருவாக்கத்துக்காக உயிரி தொழில்நுட்ப துறைக்கு ஆதரவு அளிக்க ரூ.900 கோடி மதிப்பில் கொவிட் சுரக்ஷா திட்டம் அறிவிக்கப்பட்டது.
* கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, உள்நாட்டு மூலிகை அடிப்படையிலான மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்காக உயிரி தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி மையங்கள், தேசிய மூலிகை வாரியம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 50 மூலிகைகள் பரிசோதிக்கப்படவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689929
-----
(Release ID: 1690015)