தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: இந்திய பனோரமாவை சேர்ந்த திரைப்பட இயக்குநர்களின் ஊடக சந்திப்பு

Posted On: 18 JAN 2021 4:26PM by PIB Chennai

தனது மகளின் நிர்வாண காணொலியை அவளது மடிக்கணினியில் தற்செயலாக பார்க்கும் தாய் - சரண் வேணுகோபாலின் ஒரு பாத்திர சுவப்னம் போலே (இந்திய பனோரமா - முழுநீள திரைப்படம் அல்லாத படம்).

விபத்தில் நினைவுகளை இழந்த நபர் சைக்கோ ஒருவருடன் ஒரு வீட்டில் சிக்கிக் கொள்கிறார் - கிரண் கொண்டமடுகுலாவின் கதம் (இந்திய பனோரமா திரைப்படம்).

அறிமுக இயக்குநர் திரு சரண் வேணுகோபால், நடிகர்/தயாரிப்பாளர் திரு பார்கவா போலுதாசு ஆகியோர் பனாஜியில் நடைபெறும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று பேசினர். அவர்களின் திரைப்படங்கள் இந்த வருட இந்திய பனோரமாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தனது 37-நிமிட படமான ஒரு பாத்திர சுவப்னம் குறித்துப் பேசிய திரு சரண் வேணுகோபால், “ஒருவரது தனிப்பட்ட எல்லைகள் எங்கு முடிவடைகின்றன என்று வரையறுப்பது மிகவும் கடினம். இது குறித்து இந்தத் திரைப்படம் பேசுகிறது,” என்றார். நடுராத்திரி கனவு போலஎன்பது இத்திரைப்பட தலைப்பின் மொழிபெயர்ப்பாகும்.

 

தெலுங்கு திரைப்படமான கதம்’-மில் நடித்துள்ள அதன் தயாரிப்பாளரான திரு பார்கவா போலுதாசு, இந்தியன் பனோரமாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனது திரைப்படம் தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1689690

**********************



(Release ID: 1689759) Visitor Counter : 177