ஜல்சக்தி அமைச்சகம்

மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையம் : மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா ஆய்வு

प्रविष्टि तिथि: 18 JAN 2021 4:46PM by PIB Chennai

பெரிய அளவிலான நீர் வளத் திட்டங்களில் சவாலான புவி-தொழில்நுட்ப சூழலியலில் சிறப்பான ஆய்வு, ஆலோசனை, ஆராய்ச்சிப் பணிகளுக்கு புகழ்பெற்ற மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மத்திய ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் திரு ரத்தன் லால் கட்டாரியா நடத்தினார்.

மண், பாறைகள், கான்கிரீட், செயற்கை புவியியல் பொருட்கள் உள்ளிட்ட நீர்வளத் திட்டங்களின் பல்வேறு விஷயங்களைக் கையாளும் ஒரே மைய அமைப்பு மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையமாகும்.

ஆந்திரப் பிரதேச போலவரம் திட்டம், , சர்தார் சரோவர் அணை திட்டம், உத்திரப் பிரதேச பவுன்ரத் அணைபூடான் கொலோங்ச்சு நீர் மின்சார திட்டம், ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மரில் உள்ள திட்டங்கள் உட்பட தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களிலும் மத்திய மண், பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளதாக திரு கட்டாரியா தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சி நிலையத்தை, இந்திய மென்சக்தியின் அடையாளம் என்று குறிப்பிட்ட அமைச்சர், அதன் வெற்றியானது, அயராது பணியாற்றும் இந்நிறுவனத்தின் விஞ்ஞானிகளையே சேரும் என்றார். ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்த திரு கட்டாரியா, 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளுக்கான இலக்குகளை கடந்ததற்காக விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1689695

**********************


(रिलीज़ आईडी: 1689755) आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi