அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

மீன்கள் , பறவைகள் மற்றும் பாக்டீரியா கூட்டங்களின் இயக்கத்தில் ஒழுங்கற்ற தன்மைக்கான காரணம் கண்டுபிடிப்பு

Posted On: 17 JAN 2021 12:26PM by PIB Chennai

மீன்கள், பறவைகள் மற்றும் பாக்டீரியாக் கூட்டங்களின் சுய   இயக்கத்தில் ஏற்ற இறக்கங்களின் ஒழுங்கற்ற தன்மைக்கான காரணத்தை  அறிவியல் தொழில்நுட்ப துறை  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது செயலில் உள்ள முறைகள் என அழைக்கப்படுகின்றன.

இந்த புரிதல், சிறிய அளவிலான உயிர் சாதனங்களை உருவாக்குவது போன்ற நானோ தொழில்நுட்ப பயன்பாடுகளிலும், உறுப்புகளில் பரவும் நோய்த்தொற்றின் தன்மை, எதிர்ப்பு சக்தி  போன்ற உயிரியல் மருத்துவ பயன்பாடுகளிலும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த முரண்பாடான நடத்தை குறித்த ஆய்வில், மத்திய  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான எஸ்.என். போஸ் தேசிய அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள், புன்யபிரதா பிரதான் தலைமையில் ஈடுபட்டனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689292

-----



(Release ID: 1689437) Visitor Counter : 216