ரெயில்வே அமைச்சகம்

புதிய இரும்பு தாது கொள்கையை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது

प्रविष्टि तिथि: 16 JAN 2021 1:50PM by PIB Chennai

இரும்பு தாதுக்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வதற்கான பெட்டிகள் ஒதுக்கீடு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றின் மேலாண்மைக்கான புதிய இரும்பு தாது கொள்கையை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தற்கால தேவைகளுக்கேற்றவாறு தயார்படுத்திக் கொள்வதும், இரும்பு தாது போக்குவரத்திற்கான அவர்களின் முழு தேவையையும் பூர்த்தி செய்ய உறுதி பூணுவதும் இந்த கொள்கையின் லட்சியங்களாகும்.

‘இரும்பு தாது கொள்கை 2021’ என்னும் தலைப்பிலான இந்த கொள்கை 2021 பிப்ரவரி 10 முதல் அமலுக்கு வரும். இக்கொள்கையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

*பெட்டிகள் ஒதுக்கீடு மற்றும் சரக்கை ஏற்றுதல் ஆகியவற்றில் புதிய மற்றும் பழைய ஆலைகள் ஒரே மாதிரி நடத்தப்படும்.

*ரயில்களின் மூலம் செய்யப்படும் இரும்பு தாது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், இரும்பு தாது போக்குவரத்துக்கான முன்னுரிமை ரயில்வே உள்கட்டமைப்பின் கிடைக்கக்கூடியத் தன்மையை பொருத்தே இருக்கும்.

*உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இரும்பு தாது போக்குவரத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689035

----


(रिलीज़ आईडी: 1689200) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi