பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பசுமையான மற்றும் தூய்மையான எரிசக்தி குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான சாக்ஷம் பிரச்சாரத்தை பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்கம் தொடங்கியுள்ளது

Posted On: 16 JAN 2021 1:37PM by PIB Chennai

பசுமையான மற்றும் தூய்மையான எரிசக்தி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் நோக்கில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்கம், சாக்ஷம் என்னும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

ஒரு மாதத்திற்கு நடைபெற உள்ள இந்த பிரச்சாரத்தில், கரியமில தடங்கள் அதிகரிப்பதால் உருவாகும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றி மக்களிடையே விளக்கப்படும்.

பிரச்சாரத்தை தொடங்கி வைத்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளரும் பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்க தலைவருமான திரு தருண கபூர், தூய்மையான மற்றும் பசுமையான எரிசக்திகளை நோக்கி விரிவடைந்து வரும் அதே வேளையில் எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளையும் எடுத்து வருவதற்காக எரிசக்தி நிறுவனங்களை பாராட்டினார்.

சாக்ஷம் போன்ற பிரச்சாரங்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க உதவுவதோடு, ஆரோக்கியமான சுற்றுச் சூழலுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தூய்மையான எரிசக்தியை நோக்கி இந்தியாவை நகர்த்துவதில் முக்கிய பங்கு  வகிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி சமீபத்தில் குறிப்பிட்ட ஏழு விஷயங்கள் குறித்தும்  பிரச்சாரத்தின் போது எடுத்துரைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689032

                                          -----(Release ID: 1689119) Visitor Counter : 80