சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
40% அல்லது அதை விட அதிக இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களின் பட்டியலை அரசு வெளியிட்டது
Posted On:
15 JAN 2021 7:10PM by PIB Chennai
மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள 40% அல்லது அதை விட அதிக இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 3566 பணியிடங்களின் பட்டியலை 2021 ஜனவரி 4 அன்று மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் ஏ-வில் 1046 பணியிடங்களும், குரூப் பி-யில் 515 பணியிடங்களும், குரூப் சி-யில் 1724 பணியிடங்களும், குரூப் டி-யில் 281 பணியிடங்களும் இதில் அடங்கும்.
உயரம் மிகவும் குறைவாக இருப்பவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், தசைநார் தேய்வால் பாதிக்கப்பட்டோர், ஆட்டிசத்தால் பாதிப்படைந்தோர், மனநலம் குன்றியோர், குறிப்பிட்ட கற்கும் திறன் இல்லாதோர் மற்றும் பலவகை ஊனம் கொண்டோர் ஆகிய புதிய பிரிவுகளிலும் பணியிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது ஒரு முழுமையான பட்டியல் இல்லை. மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி பெற்ற அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்களை மேலும் இணைத்துக் கொள்ளலாம்.
இந்த அறிவிப்பின் மூலம் 40% அல்லது அதை விட அதிக இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688869
-----
(Release ID: 1688957)
Visitor Counter : 358