தேர்தல் ஆணையம்

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பணிபுரியும் தேர்தல் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு குறித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்

Posted On: 15 JAN 2021 6:24PM by PIB Chennai

தலைமை தேர்தல் அதிகாரிகள், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் அலுவலகங்களில் பணியாற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் இதர சில அலுவலர்கள் தேர்தல்கள் முடிந்த பின்னர் பழிவாங்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

பெரும்பாலான நிகழ்வுகளில் இத்தகைய அலுவலர்கள் சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்காக தங்களது கடமையை பாரபட்சமின்றி செய்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, விரிவான ஆய்வுக்கு பிறகு, தொடர்புடைய அனைவருக்கும் 2021 ஜனவரி 15 அன்று கடிதம் ஒன்றை ஆணையம் எழுதியுள்ளது. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

1) தலைமை தேர்தல் அதிகாரிகள் முதல் இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் வரையிலான அலுவலர்கள் மீது அவர்களது பதவிக் காலத்தின் போது மற்றும் அவர்களால் நடத்தப்பட்ட தேர்தலின் ஒரு வருடத்திற்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் பெற வேண்டும்.

2) தலைமை தேர்தல் அதிகாரிக்கு அவரது கடமையை ஒழுங்காக செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கும் வாகனம், பாதுகாப்பு உள்ளிட்ட இதர வசதிகளை குறைக்க வேண்டாமென்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிவுறுத்தல்கள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் எதிர்ப்பர்க்கிறது. இந்த அறிவுறுத்தலின் நகலை https://eci.gov.in. என்னும் முகவரியில் பார்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688844

                                                                ------



(Release ID: 1688944) Visitor Counter : 160