நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
எத்தனால் வடித்தல் திறனை நாட்டில் அதிகரிப்பதற்கான திருத்தப்பட்ட திட்டத்தை உணவு மற்றும் பொது விநியோக துறை அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
14 JAN 2021 7:22PM by PIB Chennai
2025-க்குள் 20 சதவீத கலத்தலை எட்டவும், நாட்டின் எத்தனால் உற்பத்தி திறன் தேவையை எதிர்கொள்ளவும், எத்தனால் வடித்தல் திறனை அதிகரிப்பதற்கான திருத்தப்பட்ட திட்டத்தை உணவு மற்றும் பொது விநியோக துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே இருந்த திட்டத்தை திருத்தி உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், அரிசி, கோதுமை, பார்லி, சோளம் மற்றும் இதர தானியங்களில் இருந்தும், சர்க்கரை உள்ளிட்டவற்றில் இருந்தும் முதல் தலைமுறை எத்தனாலை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தமது வடித்தல் திறனை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும்.
சலுகையுடன் கூடிய குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கும் இத்திட்டத்தை ஊக்குவிக்குமாறு அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், ஐந்து வருடங்களுக்கான வட்டி மானியத்தையோ அல்லது 50 சதவீதம் வட்டியையோ (எது குறைவானதோ அது) அரசு செலுத்தும். ஒரு வருட கடன் தடையும் வழங்கப்படும். ரூ 40,000 கோடி மதிப்பிலான முதலிடு இதன் மூலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஜனவரி 14 அன்று இது குறித்த அறிவிப்பை உணவு மற்றும் பொது விநியோக துறை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவியை பெறுவதற்காக, அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் இதற்கான விண்ணப்பத்தை உணவு மற்றும் பொது விநியோக துறையின் இணையதளத்தில் (https://sugarethanol.nic.in) சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்குhttps://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688616
-----
(रिलीज़ आईडी: 1688688)
आगंतुक पटल : 321