அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவின் (சிஎஸ்ஐஆர்) அறிவியல் தகவல் தொடர்ப்பு மற்றும் கொள்கை ஆய்வு மையத்தை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 14 JAN 2021 5:46PM by PIB Chennai

அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவின் (சிஎஸ்ஐஆர்) புதிய மையமான அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆய்வு மையத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் இன்று தொடங்கி வைத்தார். 

சிஎஸ்ஐஆர்-ன் அறிவியல் தகவல் தொடர்பு மையம் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் மையம் ஆகியவற்றை இணைத்து சிஎஸ்ஐஆர்-  அறிவியல் தகவல் தொடர்ப்பு மற்றும் கொள்கை ஆய்வு மையம்  (CSIR-NIScPR) உருவாக்கப்பட்டுள்ளது.

இதை தொடங்கி வைத்த டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

சிஎஸ்ஐஆர்-ன் இரண்டு மையங்களை இணைத்ததன் நோக்கம், இரு மையங்களின் வலிமையையும் இணைத்து, அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க கொள்கை ஆராய்ச்சி மற்றும் தகவல் தொடர்பை புரிந்து கொள்வதற்கான உலகளாவிய சிந்தனை மையத்தை ஏற்படுத்துவதான்.

இந்த மையம் தனது அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சிகள் மூலம் சமூகத்துக்கு சேவையாற்றும். இது போன்ற ஆராய்ச்சிகள் கொவிட் 19 தொற்று சமயத்தில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆதாரத்துடன் செயல்படும் இந்த கொள்கை, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும். இந்த இரு மையங்களின் இணைவு, சிஎஸ்ஐஆர் வரலாற்றில் முக்கியமான திருப்பு முனை. இரு நிறுவனங்களிலும் உள்ள அறிவின் களஞ்சியம், தற்போது ஒன்றிணைந்து,  புதிய நிறுவனத்தை உலக அறிவியல் அரங்கில் இன்னும் பெரிய மற்றும் மதிப்புமிக்க நிறுவனமாக மாற்றும்.

இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688585

------


(Release ID: 1688674) Visitor Counter : 243


Read this release in: English , Urdu , Hindi , Punjabi