மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
சிபிஎஸ்இ பள்ளிகளில் பொறியில் கிராபிக்ஸ் பாடத்திட்டங்களுக்கு கொலாப்கேட் மென்பொருள் மற்றும் இ-புத்தகம் அறிமுகம்
प्रविष्टि तिथि:
14 JAN 2021 5:15PM by PIB Chennai
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொறியில் கிராபிக்ஸ் பாடத்திட்டங்களுக்கு கொலாப்கேட் மென்பொருள் மற்றும் இ-புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய தகவல் மையம்(என்ஐசி) மற்றும் சிபிஎஸ்சி, மத்திய கல்வி அமைச்சகம், அடல் புத்தாக்க திட்டம், நிதி ஆயோக் ஆகியவை இணைந்து கொலாப் கேட் மென்பொருளையும், கொலாப் கேட் 3டி இ-புத்தகத்தையும் இன்று அறிமுகம் செய்தது. இந்த காணொலி நிகழ்ச்சியில், மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு அஜய் சானே, என்ஐசி இயக்குனர் டாக்டர் நீட்டார் வர்மா, அடல் புத்தாக்க திட்ட இயக்குனர் திரு ரமணன் ராமநாதன், சிபிஎஸ்இ தலைவர் திரு மனோஜ் அகுஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொறியில் கிராபிக்ஸ் பாடத்திட்டத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டு காலம் கொலாப் கேட் மென்பொருள் ஆதரவு மற்றும் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ஐசி மற்றும் சிபிஎஸ்இ ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688571
----
(रिलीज़ आईडी: 1688661)
आगंतुक पटल : 186