இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தலைசிறந்த விளையாட்டு அறிவியல் நிபுணர் கெனாடிஜூஸ் சோகோலோவோஸ் தேசிய நீச்சல் முகாமுக்கு வருகை
प्रविष्टि तिथि:
13 JAN 2021 6:25PM by PIB Chennai
பெங்களூருவில் உள்ள திறன்மிகு விளையாட்டு மையத்தில் ஜனவரி 11 முதல் பிப்ரவரி 21 வரை நடைபெறும் தேசிய நீச்சல் முகாமில், தலைசிறந்த உடலியல் மற்றும் விளையாட்டு அறிவியல் நிபுணர் டாக்டர் கெனாடிஜூஸ் சோகோலோவோஸ் ஆறு நாட்களுக்கு கலந்து கொள்கிறார்.
மூத்த வீரர்களுக்கும், ஸ்ரீஹரி நடராஜ், குஷாக்ரா ராவத், மிஹிர் ஆம்பிரே போன்ற டாப்ஸ்-சின் வளர்ந்து வரும் நீச்சல் வீரர்களுக்கும் சர்வதேச புகழ்பெற்ற நிபுணரின் வருகை ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க நீச்சல் கூட்டமைப்பின் உடலியல் மற்றும் விளையாட்டு அறிவியல் துறையில் எட்டு வருடங்கள் தலைமை பொறுப்பை வகித்த டாக்டர் சோகோலோவோஸ், அமெரிக்க நீச்சல் வீரர்கள், நீர் விளையாட்டு வீரர்கள் மற்றும் டிரையத்லான் வீரர்களுக்கு வழிகாட்டுதல் அளித்துள்ளார். 28 முறை ஒலிம்பிக் பதக்கத்தை வென்றவரான மைக்கேல் பெல்ப்ஸ் உள்ளிட்ட முன்னாள் நீச்சல வீரர்களுக்கு தனது புகழ்பெற்ற ஆராய்ச்சி வழிமுறையின் மூலம் டாக்டர் சோகோலோவோஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
-----
(Release ID: 1688317)
(रिलीज़ आईडी: 1688386)
आगंतुक पटल : 232